யாழில் தனிப்பட்ட விஜயமாக வடமராட்சிக்கு வந்த ராஜாங்க அமைச்சரை சீண்டிய நாயை அவரது பாதுகாவலர்கள் சுட்டுகொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவமானது வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ராஜாங்க அமைச்சர் தனது குடும்ப நண்பரை நேரில் சந்திக்க யாழ். வல்வெட்டித்துறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அங்கு வந்த வளர்ப்பு நாய் ராஜாங்க அமைச்சசரான ரோகன் ரத்வத்தேயை கண்டதுடன் குரைத்து கடிக்க வந்துள்ளது.
இதனையடுத்து அதை கண்ட பாதுகாவலர்கள் நாயை துப்பாக்கியால் சுட்டுளள்ளதையடுத்து நாய் உயிரிழந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது ராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்டதால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.