கே பி பி எல்[KPPL] இறுதிச் சுற்றுக்களில் மோதும் கிளியின் பிரபல அணிகள்

கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தும் கிளி பீப்பிள் பிரிமியர் லீக் [KPPL] கழகங்களுக்கிடையிலான துடுப்பாட்டத் தொடர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கள் விரைவில் கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள புதிய துடுப்பாட்ட மைதானத்தில் இடம்பெற உள்ளது. 

சுமார் 13 கழகங்கள் கலந்துகொண்ட லீக் போட்டியில் இந்து இளைஞர், உதயதாரகை, இளந்தாரகை மற்றும் யுனைடெட்  ஆகிய அணிகள் தமது திறமையை வெளிக்காட்டி அரை இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன. விரைவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியை சமூக ஆர்வலர்கள் பொதுச்சேவை உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என பெருமளவானவர்கள் பார்த்து மகிழ உள்ளார்கள். 

கிளிநொச்சியில் விளையாட்டுத் துறையை வளர்க்கும் நோக்குடன் கிளி மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்கான கே பி பி எல் உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த ஆவணிமாதம் சிறப்பாக நடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஆசிரியர்