Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சாப்பாடு கேட்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல | பொன்சேகா

சாப்பாடு கேட்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல | பொன்சேகா

2 minutes read

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் நலன் அறிய நேற்று சென்றிருந்த போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய் ஏற்பட்டுள்ளது

சரத் பொன்சேகா-Sarath Fonseka

வசந்த முதலிகே என்ற பல்கலைக்கழக மாணவன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 90 நாட்கள் தடுப்பு காவல் அனுமதி பெற்று ஏற்கனவே இரண்டு மாதங்கள் தடுத்து வைத்துள்ளனர்.

இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டில் பயங்கரவாதம் இல்லை. நாட்டு மக்கள், சாப்பிடவும் குடிக்கவும் இல்லாத காரணத்தினால் குரல் எழுப்புகின்றனர்.

பயங்கரவாதத்தை உருவாக்கி, அப்படி குரல் கொடுக்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தடுத்து வைத்திருப்பது, கோழைத்தனமான செயல் என்பதுடன் அடிப்படை உரிமை மீறலாக நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் மனித உரிமை மீறல்.

வசந்த முதலிகே சுகவீனமாக இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டேன். வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்படும் வசதிகளின் குறைப்பாடுகள் காரணமாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இளம் பிள்ளைகளை பிடித்துக்கொண்டு வந்தது, இங்கு தடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு நோய்கள் தொற்றும்.உயிருக்கும் ஆபத்து. இதனால், நான் அந்த நிலைப்பற்றி அறிய இங்கு வந்தேன்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதிப்பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகர, சட்டத்திற்கு அமைய பார்வையிட அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமக்குள்ள சிறப்புரிமைகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடும் உரிமையுள்ளது. இதனால், அவர்களின் சட்டம் எம்மை தடுக்க முடியாது என தெளிவுப்படுத்தினேன்.

ஆனால், அவர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை. என்னுடன் இருந்த சட்டத்தரணிகளும் இதனை தெளிவுப்படுத்தினர், எனினும் அவர் அதனை ஏற்க தயாராக இருக்கவில்லை. எனக்கு வசந்த முதலிகேவை பார்க்க அனுமதி வழங்கவில்லை.

அரச பயங்கரவாதம் இருப்பதாக தோன்றுகிறது

சரத் பொன்சேகா-Sarath Fonseka

இந்த இடத்தில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் என்னுடன் பேசினார். பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

மாணவனின் தந்தை படை வீரர். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர்களின் பிள்ளைகளுக்கு குரல் கொடுக்கவும் சுதந்திரமாக வாழவும் பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், இது மிகவும் பயங்கரமான நிலைமை. அரச பயங்கரவாத இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More