ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணவ முகாமுக்கு அருகேயுள்ள காணியைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் இன்று ஈடுபட்டனர்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் செய்கின்ற வேலை இன்று (23) ஆரம்பிக்கப்பட்டது

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்மித்த வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்