0
பாடசாலைகளில் வழமை போன்று நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.