செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வன்முறைக் கும்பல் மோதல்! – அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

யாழில் வன்முறைக் கும்பல் மோதல்! – அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

0 minutes read

யாழ்., பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறைக் கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு வயதுக் குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.

மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் உயிா்காப்புப் பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறைக் கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் சிலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றது.

இதன்போது அம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த காடையா்கள் அம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதுடன், அதிலிருந்த உயிா்காப்புப் பணியாளா்களைக் கடுமையாக அச்சுறுத்தினா். எனினும், அம்புலன்ஸ் வாகனம் காயமடைந்த அறுவரையும் அங்கிருந்து ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.