March 31, 2023 6:47 am

முன்னாள் சபாநாயகருக்கு ஸ்ரீலங்காபிமான்ய விருது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவிற்கு இவ்வாண்டுக்கான தேசிய விருதான ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருதினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்த இலங்கைப் பிரஜைகளுக்கும் இலங்கையரல்லாத நபர்களுக்கும் அவரது வாழ்நாளில் ஒருதடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கல் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருவது மரபாகவுள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருது எமது நாட்டில் வழங்கப்படுகின்ற உயர் தேசிய கௌரவ விருதாகும். தேசபந்து கரு ஜயசூரிய ஆற்றிய சேவையைப் பாராட்டுமுகமாக அவர்களுக்கு ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருதை 2023 பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதியன்று வழங்கிக் கௌரவிப்பதற்காக  ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்