May 31, 2023 5:08 pm

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை சார்ள்ஸ்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸின் பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளாதபோதும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாகப் பல தரப்பும் குற்றம் சுமத்தும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனாலும், அவரது பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் கலந்துகொள்ளவில்லை. ஏனைய 4 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்