“தலைவர் காட்டிய சின்னமே வீட்டுச் சின்னம். எனவே, தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.
தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இந்தச் சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே, தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” – என்றார்.