ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்
“உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் எங்கள் பக்கம் வருவதற்கு முற்படுகின்றனர். அவர்களை நாம் வரவேற்கின்றோம். மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.
மேலும் சிலர் ஜனாதிபதியிடம் இரகசியமாக அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்” – என்றார்.
டலஸ் அழகப்பெரும அணியை இலக்கு வைத்தே மஹிந்தானந்த இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.