இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார பொறியியலாளர்கள் இந்தச் சந்தேகத்தை வெளியிடுகின்றனர்.
மின்வெட்டு இனி இடம்பெறாது என்று கூறி மின் கட்டணத்தை அதிகரித்த போதிலும் அடுத்த மாதம் மின்வெட்டு இடம்பெறக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சாரத்தை அவசரமாகக் கொள்வனவு செய்வதற்காக அதிகமான பணம் செலவாகின்றமை, நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் 52 வீதத்தால் குறைந்துள்ளமை, சப்புகஸ்கந்த நிலையத்தால் மின்னுற்பத்தி செய்ய முடியாமை உள்ளிட்ட காரணிகளால் அடுத்த மாதம் மின்வெட்டு சாத்தியப்படலாம் என்று பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.