செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையைக் காரித் துப்பும் சந்திரிகா!

இலங்கையைக் காரித் துப்பும் சந்திரிகா!

1 minutes read

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு’ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவர் மதன்ஜீத் சிங் விரிவுரையின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி என்பன இதனை இணைய வழியாக ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின்போது மேலும் தமது கருத்துக்களைப் பதிவு செய்த சந்திரிகா,

“75 ஆண்டுகள் என்பது ஒரு தேசம் கணிசமான முன்னேற்றத்தை அடைய எடுக்கும் நீண்ட காலமாகும்.

இந்தநிலையில் காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட, சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்தது. எனினும், இன்று 75 வயதில், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டது” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்களைக் குற்றம் சாட்டிய அதேவேளை, ஊழல் மற்றும் முறையான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் தோல்வியே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறித்த நிகழ்வின் பின்னரான செவ்வியில் குறிப்பிட்டார் என ‘த ஹிந்து தெரிவித்துள்ளது.

ராஜபக்சக்கள் காலத்தில், நீதித்துறை, பொலிஸ் துறை மற்றும் பொதுச் சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களில் பரவலான ஊழல் ஊடுருவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை, பல்லின மற்றும் சகல மத சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்கத் தவறிவிட்டது என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரப் பகிர்வு முறையை உறுதிப்படுத்த கடந்த 75 ஆண்டுகளாக தவறிவிட்டோம் என இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்த சந்திகா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதைய அரசமைப்பு ஜனநாயகமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் புதிய அரசமைப்புக்கான தமது சொந்த முன்மொழிவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.