Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எடின்பரோ மரதன் விழாவில் தாயகத்தில் போதைப் பாவனைக்கு  எதிராக பங்குபெறும் பெருமளவான வீரர்கள் | KiliPeople & JMFOA UK

எடின்பரோ மரதன் விழாவில் தாயகத்தில் போதைப் பாவனைக்கு  எதிராக பங்குபெறும் பெருமளவான வீரர்கள் | KiliPeople & JMFOA UK

1 minutes read

எதிர்வரும் மே மாதம் 27ம் 28ம் திகதிகளில் ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் நடைபெற உள்ள உலகப்பிரசித்தி பெற்ற  மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் 400 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்காக கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF )  அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு பெருமளவான தமிழ் மரதன் ஓட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

இந்த ஆண்டு கிளி பீப்பிள் அமைப்பானது யாழ் மருத்துவபீட கடல்கடந்த பழையமானவர்கள் அமைப்பின் பிரித்தானியக்கிளையுடன் (JMFOA-UK) இணைந்து தமிழர் தாயக தேசங்களில் Say No To Drugs in North & East of Srilanka and Go Green Globe போன்ற திட்டங்களுக்கு இதில் சேகரிக்கப்படும் நிதியினைப் பயன்படுத்த உள்ளனர்.

எடின்பரோ மரதன் விழாவில் கலந்துகொண்டு நிதிசேகரித்து மேல் உள்ள திட்டங்களுக்கு ஆதரவு வழங்க விரும்புபவர்கள் கீழ் உள்ள படிமுறைகளை பின்பற்றுமாறு இரு அமைப்பினரும் வேண்டிக்கொள்கின்றார்கள்.

1) www.Edinburghmarathon.com
2) Please click – “ Our Charities “
3) கீழே“ Other Charities “ என்ற இடத்தில் touch செய்து Kilipeople என்பதை select செய்து GO என்பதை click பண்ணவும்
4) உங்களது மரதன் ஓட்ட தூரத்தை ( distance ) select பண்ணவும்.
5) அதன் பின்னர் run for Kilipeople என்பதை click செய்யவும்.
6) நீங்கள் முதன்முறை இந்த Edinburgh மரதனில் பங்குபற்றுபவராக இருந்தால் “ Create a myrunning  account “ என்பதை click செய்யவும்.
7) பின்னர் உங்களது விபரங்களை type செய்து continue என்பதை click செய்யுங்கள்.
8) அவ்வளவும் தான் நீங்கள் இதற்கு எந்தவித பணமும் செலுத்த தேவை இல்லை.
9) kilipeople charity உங்களுக்கான entry fee ஐ கட்டி உங்களது விண்ணப்பத்தை உடனடியாக உறுதிப்படுத்துவார்கள்.
10) பின்பு உங்களுக்கு வரும் ஈ மெயில் களின் படி Edinburgh ( Scotland) மரதனில் வந்து கலந்து கொண்டு இந்த மரதனை முடிப்பவர்களுக்கு EMF இன் பரிசுப்பொருட்கள், சான்றிதன், medal, T-shirt என்பன கிடைக்கப்பெறும்.

11) உங்களை உற்சாகப்படுத்த எடின்பரோ மரதன் நிகழ்வுக்கு கிளி பீப்பிள் தொண்டர்கள் குழு வருகைதருவார்கள்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More