December 4, 2023 5:31 am

மூடிய அறைக்குள் ரணில் – பஸில் இரகசிய சந்திப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முக்கியமாக ஜனாதிபதித் தேர்தல் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது எனத் தெரியவருகின்றது.

அதில் பல யோசனைகளை பஸில் முன்வைத்தார் எனவும் அறியமுடிகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையே மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்துதல், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்குதல் உள்ளிட்ட பல ஆலோசனைகளை ரணிலிடம் பஸில் முன்வைத்தார் எனவும் தெரியவருகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்