June 4, 2023 9:44 pm

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்தில் இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட, பதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (26)கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அவுஸ்திரரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக  தெரிவித்து 18இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக 4முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் பிரகாரம் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் தொழிலுக்காக ஆட்களை இணைத்துக்கொள்ளும் குற்றச்சாட்டின் பேரில் பதுளை தெமோதரயில் குறித்த பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரகள் இருவரும் தற்போது பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர்.

குறித்த சசந்தேக நபர்கள் தவிர, வெளிநாட்டு தொழில் மோசடி மற்றும் அது தொடர்பான மேலுமொரு நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நபரை கைதுசெய்வதற்கு தேவையான விசாரணை நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுவருதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்