1
“நான் அமைச்சுப் பதவி கேட்டு அலையவில்லை. ஜனாதிபதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதனைப் பொறுப்பேற்கத் தயார்.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன், தனக்கு இன்னும் அமைச்சுப் பதவி கிடைக்காமை தொடர்பில் கவலை அடையவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, தானும் அமைச்சுப் பதவி கோரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.