September 22, 2023 5:31 am

அமைச்சுப் பதவிக்காக ரணிலின் காலில் விழவில்லை! – நாமல் சொல்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“மொட்டுக் கட்சியினர் எவரும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று ஜனாதிபதியின் காலில் விழவில்லை. அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்க வேண்டும், யாருக்கு வழங்கக் கூடாது என்று முடிவெடுக்க அவருக்கு முழு உரித்துண்டு.

மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது. இந்த அரசு மொட்டு அரசுதான்.

மக்கள் ஆணை இன்னமும் இந்த அரசுக்கு உண்டு. எந்தத் தேர்தல் நடந்தாலும், அதை எமது கட்சி நிரூபித்துக் காட்டும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்