October 4, 2023 4:30 am

உடல் முழுவதும் காயங்களுடன் சிறுவனின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முல்லேரியா – ஹல்பராவ பகுதியில் ஐந்து வயது சிறுவன் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சிறுவனின் சடலம் கிடப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே பொலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்

குறித்த சிறுவனின் தந்தை பிறிதொரு திருமணம் செய்துகொண்டு வசித்து வருவதோடு, தாய் கூலித்தொழிலுக்காகச் செல்பவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுவரின் உடலில் கண்ணாடிப் போத்தல்களால் குத்தப்பட்ட காயங்கள் உள்ள நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கண்ணாடிப் போத்தல்கள் உடைந்து அவரின் உடலில் குத்தியதால் அவர் மரணித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவனின் உடலின் அருகில் வளர்ப்பு நாய்க்குட்டி அழுதவாறு படுத்திருந்த உருக்கமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்