செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் தப்பியோடிய கைதியைப் பிடிக்க விசாரணை ஆரம்பம்!

மட்டக்களப்பில் தப்பியோடிய கைதியைப் பிடிக்க விசாரணை ஆரம்பம்!

0 minutes read

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்குக் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

10 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காகக் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவரை நேற்றுமுன்தினம் பதில் நீதிவானிடம் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமையைத் தொடர்ந்து சந்தேகநபரை மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இதன்போதே குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.