December 7, 2023 9:16 am

படையைக் குவித்து கஜேந்திரகுமாரைப் பாதுகாக்கின்றார் ரணில்! – கம்மன்பில சீற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து பொலிஸாரையும், படையினரையும் அவரின் வீட்டுக்கு முன்பாகக் குவித்து அவரைப் பாதுகாக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”

– இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்றும், அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உதய கம்மன்பில எம்.பி. வலியுறுத்தினார்.

இல்லையேல் ஜனாதிபதி ரணிலின் வீட்டை முற்றுகையிடவும் தாம் தயங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் செயற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரட்டியடித்தே தீருவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்