September 28, 2023 9:36 pm

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழரை அழிக்க முடியாது! – மனோ சூளுரை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”

– இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால், இனவாதம் இருக்கின்றது.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கின்றீர்கள். இந்நோக்குக்காக நீங்கள் அதிக பங்களிக்க வேண்டும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்