December 2, 2023 7:14 pm

சீரற்ற காலநிலையால் 6 ஆயிரம் பேர் பாதிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, காலி, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை மற்றும் காற்றால் நாடளாவிய ரீதியில் 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்