December 2, 2023 3:48 pm

வவுனியாவில் கோர விபத்து! பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ – 9 வீதி  விளக்குவைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கண்டியைச் சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்