December 4, 2023 5:54 am

11 மாணவிகளைச் சீண்டிய ஆங்கில ஆசிரியர் கைது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குருநாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தரம் 5இல் கல்வி  கற்கும் 11 மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்தார் என்ற  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகத்துக்குரிய  ஆசிரியர் மீது மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது பாடத்தைக் கற்பிக்கும்போது வகுப்பில் உள்ள  மாணவிகளின் உடலைத் தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பாலியல் தொந்தரவு செய்தார் என்று கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்