செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

0 minutes read

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணியில் உருக்குலைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.

இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரைக் கடந்த 13ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், காணாமல்போன அந்த இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.