December 7, 2023 12:56 am

ரணில் – பைடன் சந்திப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின்போதே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.

சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் பைடன் தம்பதியினருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்