December 4, 2023 6:29 am

காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காலியில் இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வர்த்தகர் காலி – டிக்சன் வீதியில் காரில் பயணித்த வேளை அவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்