December 2, 2023 9:25 pm

தேரேறி வந்தான் வல்லிபுரத்தான்! – அலையெனத் திரண்ட பக்தர்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயப் பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து காலை 8.45 மணியளவில் வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்தார்.

விஷ்ணு பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்