December 3, 2023 10:37 am

சாவகச்சேரி வாகன விபத்தில் இளைஞர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நேற்றைய தினம் (01.10.2023)இரவு வேலையில் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்