November 28, 2023 7:20 pm

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அநுராதகம பிரதேசத்தின் யட்டகல, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள், சீருடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஊர்கஸ்மன்ஹந்திய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் வீட்டில் போதை மாத்திரைகள் இருப்பதாக ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது  இராணுவ சீருடைகள், பயிற்சி வெடிகுண்டுகள், தோட்டாக்கள்  ரம்போ கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்