November 28, 2023 8:31 pm

வல்வெட்டித்துறையில் ஆணின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் (வயது – 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இரவு படுக்கையில் இருந்து அவரைக் காலையில் காணாத நிலையில் தேடியபோது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டார்.

சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரதே பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்