December 11, 2023 3:53 am

கொழும்பு விபத்தில் 7 வயது தமிழ்ச் சிறுவன் பலி! – தந்தை படுகாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இன்று (26) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நீர்கொழும்பைச் சேர்ந்த லோகேஸ்வரன் சயந்தன் என்ற 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற உயிரிழந்த சிறுவனின் தந்தையான இராமச்சந்திரன் லோகேஸ்வரன் (வயது 38) படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காரின் சாரதியான 27 வயதுடைய இளைஞர் சிறு காயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் பலத்த சேதமடைந்துள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்