December 4, 2023 6:50 am

“அம்பிட்டிய தேரருக்கு எதிராகப் பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபடும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராகப் பொலிஸார் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்க்கவில்லை எனக் கோரி பொலிஸ்மா அதிபருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் கடந்த சில நாட்களாக விடுத்துவரும் அறிக்கைகள் குறித்து உங்கள் கவனத்துக்குக்  கொண்டுவர விரும்புகின்றேன். இந்த அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனைத் தாக்கித் தேரர் தொடர்ச்சியாக அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும்  தமிழ் மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும்.

பொலிஸார் ஏன் அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை?” – என்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்