November 28, 2023 8:27 pm

சாம்பிராணித் தூபத்துக்குத் பெற்றோல் ஊற்றியதாலேயே ஆடையகத்தில் தீ பரவல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கொழும்பு – புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தைப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடையகத்துக்குச் சாம்பிராணித் தூபம் காட்டுவதற்காகத் தேங்காய் சிரட்டைகளுக்குப் பெற்றோல் ஊற்றி அதனைப் பற்றவைக்கும் போதே தீ பரவியுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆடையகத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்