November 28, 2023 7:17 pm

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
யாழ். தையிட்டியில் மக்களின் காணிகளைச் சுவீகரித்துச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத விகாரைக்கு எதிராகக் காணியின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் தமிழ்த்  தேசியம் சார்ந்த கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில், விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தையிட்டி விகாரையில் போயா தினமான இன்று வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நேற்றிலிருந்து போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்