December 2, 2023 5:26 pm

சம்பந்தனுடன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழு பேச்சு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்