November 28, 2023 7:14 pm

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக யாழில் தீப்பந்தப் பேரணி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் தீப்பந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றிரவு இந்தப் பேரணி நடைபெற்றது.

மாவைகலட்டி கிராமத்திலிருந்து ஆரம்பமான பேரணி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் வரை சென்றது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், கிராம மக்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்