December 7, 2023 12:01 am

தமிழருக்குத் தீர்வு: நிர்மலாவிடம் உறுதியளித்தாராம் ரணில்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார். இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார்.”

– இவ்வாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கின்றோம். அதேபோல் அவர்களும் ஜனாதிபதியின் தேசிய ரீதியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிரணி என இரு தரப்பினரும் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்