December 2, 2023 6:11 pm

கம்பளையில் பெண் ஒருவர் படுகொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் அவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை, தெல்பிடிய தேவிட பகுதியைச் சேர்ந்த பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் பணக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து அவரைக் கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளை வீட்டில் அந்தப் பெண்ணைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சந்தேகநபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்