கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தரம் 1இல் கல்வி பயிலும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நான்கு மாணவர்களும், இரு மாணவிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.