December 10, 2023 12:57 am

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கவேமாட்டாராம் மஹிந்த!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டமைக்குத் நானும் அரசில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.”

– இவ்வாறு கோட்டாபய அரசில் பிரதமராகப் பதவி வகித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக  அண்மையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் எனவும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதற்கான காரணங்களை விளக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் எனவும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் மஹிந்த மேலும் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்