Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது | கனடா ஊடகத்திற்கு அனுரகுமார பேட்டி

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது | கனடா ஊடகத்திற்கு அனுரகுமார பேட்டி

2 minutes read

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது என தெரிவிததுள்ள  ஜேவிபியன் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க கனடா சமூகத்தினை அதன் பன்முகத்தன்மைக்காக நான் விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்

குளோப் அன்ட் மெயிலுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

 

 

கேள்வி-

கனடாவில் நீங்கள் சந்தித்த மக்களிற்கு நீங்கள் தெரிவித்த முக்கிய செய்திஎன்ன?

 

பதில் -இலங்கையர்கள் இங்கு வசதியான வாழ்க்கைவாழ்கின்ற போதிலும் அவர்கள் தாயகத்துடன் பிணைப்பைகொண்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் கட்டமைப்பேஇந்த நெருக்கடிகளை உருவாக்கியது.

இதனை மாற்றுவதற்கு அரசியல் மாற்றம் அவசியம்

நிலைமையை மாற்றுவதற்கு தாங்கள் பங்களிப்பினை வழங்க முடியும் என கனடாவில் உள்ள இலங்கையர்கள் நம்புகின்றனர் .

2 இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியது எனநீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்- உயிர்த்தஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்ற பயன்படுத்தியது என சமூகம் நம்புகின்றது.

சமூகம் ஏற்கனவே அரசாங்கத்தை குற்றம்சாட்டுகின்றது இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான உரிய விசாரணைகளை மேற்கொள்ளப்போவதில்லை என சமூகம் நம்புகின்றது.

 

3

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மூன்று தனித்தனி விசாரணைகள் இடம்பெற்றுள்ளன –  2018 இல் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயங்கரவாத குழுவினால் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தோல்வியடைந்துள்ளன நீங்கள் தெரிவுசெய்யப்பட்டால் நீதிக்கான தேடலில் கவனம் செலுத்துவீர்கள் என தெரிவித்துள்ளீர்கள்?

பதில்- ஆம் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலையின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறியவேண்டும்.

 

கேள்வி-அரசியல் வன்முறை குறித்து பேசும்போது எங்கள் பிரதமர் (கனடா) இந்தியா மாற்றுக்கருத்து உடைய ஒருவரை கனடாவில் படுகொலை செய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான இலங்கையின் உறவு எவ்வாறானதாககாணப்படுகின்றது அவ்வாறான செல்வாக்கு செலுத்தப்படுவது குறித்து நீங்கள் கரிசனை கொண்டுள்ளீர்களா?

பதில்- இரண்டு மாதங்களிற்கு முன்னர் இந்திய  அரசாங்கம் என்னை இந்தியாவிற்கு அழைத்தது- நாங்கள் இந்தியாவிற்குஎதிராக எதுவும் செய்யவில்லை இந்தியாவின் உள்விவகாரங்களை மோடி கையாளலாம் ஆனால் அது இலங்கையை பாதிக்கப்போவதில்லை.

மூன்று தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியா இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது- ஆனால் அவர்கள் தற்போது மாற்றமடைந்துவிட்டனர் இந்தியா தற்போது இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மாத்திரமே கரிசனை கொண்டுள்ளது.

சோசலிசத்தினை வலுவாக ஆதரிப்பவர் என்ற அடிப்படையில் உங்கள் பொருhளதாரத்தை மீட்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகள் குறித்து நீங்கள் கரிசனை கொண்டுள்ளீர்களா? இலங்கை என்னசெய்யவேண்டும்?

பதில்- சர்வதேச நாணயநிதியத்தின் உடன்படிக்கையிலிருந்து வெளியேற முடியாது சர்வதேச நாணயநிதியத்தினால் மாத்திரமே எங்களின் நெருக்கடிகளை கையாளமுடியும்.

அதேவேளை இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணயநிதியத்தின்  யோசனைகள் போதுமானவையில்லை ஆகவே நாங்கள் எங்கள் தீர்வுகளை உருவாக்கவேண்டும்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் நான் தனித்தனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புகின்றேன்

இந்தியாவும் ஜப்பானும் சர்வதேச நாணயநிதியத்தின் யோசனைக்குள் காணப்படுகின்றன  ஆனால் சீனா அந்த செயற்பாடுகளிற்கு வெளியே உள்ளது – இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய நாடு சீனா.

இலங்கை கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன

 

பதில்-

 

கனடா சமூகத்தினை அதன் பன்முகத்தன்மைக்காக நான் விரும்புகின்றேன்  இலங்கைஒரு சிறிய நாடு உலகசனத்தொகையில் மிகசிறிய அளவு சனத்தொகையை கொண்ட நாடு ஆனால் நாங்கள் பன்முகத்தன்மையின் கொண்டாட்டத்தை கட்டியெழுப்புவதில் இன்னமும் தோல்வியடைந்தவர்களா காணப்படுகின்றோம்.

கேள்வி

தீவிர வலதுசாரி போக்கு பல ஜனநாயகங்களில் தலைதூக்கி வருகின்றது இனவன்முறைகளை உருவாக்குகின்றது – இது உங்களுக்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ளதா?

பதில் – இலங்கையில் தேசியவாதம் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டது-அரசியல்வாதிகள் பலதடவை முயற்சி செய்தார்கள் தோல்வியடைந்துவிட்டார்கள்  தற்போது எஞ்சியுள்ள விடயம் என்னவென்றால் நாங்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தி ஒன்றிணைத்து இலங்கைகட்டியெழுப்பவேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More