செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோர விபத்தில் சாவு!

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோர விபத்தில் சாவு!

1 minutes read

வவுனியா – ஓமந்தை, ஏ – 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் உயிரிழந்தார்.

முல்லைத்தீவில் இருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கிப் பயணித்த பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளரின் வாகனம் வவுனியா, ஓமந்தை, கள்ளிக்குளம் சந்தியைக் கடந்து பயணித்தபோது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது டிப்பர் வாகனத்துக்கு முன்னே அதே திசையில் பயணித்த ஓட்டோவும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.

விபத்தில்  வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளரான வைத்தியர் கு.அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

வைத்தியர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளராவார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.