பயங்கர சூறாவளி சீற்றத்துக்கு இதுவரை 25 பேர் பலி.

அமெரிக்காவின் டென்சி மாகாணம் நாஸ்வில்லி ((Nashville)) உள்ளிட்ட இடங்களை நேற்று அடுத்தடுத்து பயங்கர சூறாவளி தாக்கின. அப்போது சுழன்றடித்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன.

மேலும் நூற்றுகணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்