கொரோனோவால் 102 வருடங்களின் இழுத்து மூடப்படும் உச்ச நீதிமன்றம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7,500 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு 88ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 4,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், 102 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக மூடப்படவுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறும்போது:-

கோவிட் 19 காய்ச்சல் பரவி வருவதை அடுத்து வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்கிறது. March 23 முதல் April 1ம் திகதி வரை இது அமுலில் இருக்கும்.
பொதுச் சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

1918ல் உலகளவில் ஏற்பட்ட ஸ்பானிஸ் ப்ளூ காய்ச்சல் காரணமாக பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 102 வருடங்களுக்குப் பிறகு, தற்போது மூடப்படுகிறது.
எனினும் வழக்கமான அலுவலக வேலைகள் தொடர்ந்து நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக நடைபெறும் நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டம் தொலைபேசி மூலமாக நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்திலுள்ள 9 நீதிபதிகளின் சராசரி வயது 67 ஆகும். இதில் 2 நீதிபதிகள் 80 வயதையும் தாண்டியவர்கள்.

வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

ஆசிரியர்