Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கும் இரத்த வகை இதுதான்!!!

கொரோனா வைரஸ் தாக்கும் இரத்த வகை இதுதான்!!!

2 minutes read

A பிரிவு ரத்த வகை உடையவர்கள் கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என்று சீனா ஆய்வறிக்கை கூறியுள்ளது.சீனாவில் கொரோனா தாக்கிய 2,500 பேரை கொண்டு வைத்தியர்கள் ஆராய்ச்சியை செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

பீஜீங், வுஹான், ஷங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட சீனா முழுவதும் உள்ள நகரங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இது சக ஆய்வுகளுடன் மதிப்பாய்வு செய்யப்படவில்லை, மேலும் தற்போதைய வைத்திய நடைமுறைக்கு வழிகாட்ட இந்த ஆய்வைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2,500 பேரில் 65% பேர் A பிரிவு ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வுஹானில் கொரோனா வைரஸால் இறந்த 206 நோயாளிகளில், 85 பேருக்கு A வகை ரத்தம் இருந்தது. O ரத்த வகை குறைவாக இருந்துள்ளது. இது வெவ்வேறு வயது மற்றும் பாலினக் குழுக்களில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது A+ , A- , AB+ , AB- ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் கொரோனோ வைரஸ் எளிதாக தாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் O+, B+ , B- மற்றும் O- வகை ரத்தம் கொண்டவர்களை குறைவாக தாக்கியுள்ளது.

O வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் A வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

A வகை ரத்தம் கொண்டவர்கள் தொற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்க குறிப்பாக தனிப்பட்ட பாதுகாப்பு தேவைப்படலாம், இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக A வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். எனவே A ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

ரத்த வகைகள் மக்கள் தொகையில் வேறுபடுகின்றன. அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 44% பேர் O வகை, சுமார் 41% பேர் A வகை. சுமார் ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட வுஹானில், O வகை 32 சதவீதமும், A வகை 34 சதவீதமும் ஆகும். ஆரோக்கியமான மக்கள் மத்தியில். கொரோனா நோயாளிகளில், இது சுமார் 38% மற்றும் 25% இருந்தது.

முந்தைய ஆய்வுகளின்படி, நோர்வாக் வைரஸ் ( Norwalk virus ) , ஹெபடைடிஸ் பி ( hepatitis B ) மற்றும் கடுமையான சுவாச நோய் (சார்ஸ்) உள்ளிட்ட பிற தொற்று நோய்களில் ரத்த வகை வேறுபாடு காணப்படுகிறது

புதிய ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களுக்கு உதவக்கூடும், ஆனால் சாதாரண மக்கள் புள்ளிவிவரங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் A வகையென்றால், பயப்படத் தேவையில்லை. நீங்கள் 100% பாதிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல.

நீங்கள் O வகை என்றால், நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் இன்னும் கைகளை கழுவ வேண்டும் மற்றும் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வணக்கம் லண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More