உண்மையை மறைக்கிறதா சீனா? ஒரு கோடியே 47 லட்சம் பேர் எங்கே போனார்கள்?

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பலவும் சந்தேகப்படும் நிலையில் அந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் புள்ளி விவரமொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நியூயோர்க் நகரில் வசிக்கும் ஹொங்கொங்கைச் சேர்ந்த் ஜெனிபர் ஸெங்க் (Jennifer Zeng) என்பவர் வெளியிட்டிருக்கும் புதிய புள்ளி விவரங்கள் உண்மையிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சீனாவில் கையடக்க தொலைபேசி சேவைகளை வழங்கி வரும் 3 நிறுவனங்களின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி, சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீன அரசாங்கம் கூறியதை விட பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஜெனிபர் ஸெங்க் வெளியிட்டுள்ள தகவல்கள்:-

சைனா மொபைல்’ ( China Mobile ) நிறுவனம் மட்டும் கடந்த January மாதம் 81 லட்சத்தி 16 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசியை இவ்வளவு காலமும் பாவித்தவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்? அவர்கள், வேறு கையடக்க தொலைபேசி சேவை நிறுவனத்துக்கு மாறி விட்டார்களா? அல்லது கையடக்க தொலைபேசியை எடுத்துச் செல்ல முடியாத உலகத்துக்கு சென்று விட்டார்களா?

சீனாவின் மற்றொரு மிகப்பெரிய கையடக்க தொலைபேசி சேவை நிறுவனமான ‘சைனா யுனிகொம், ( China Unicom) கடந்த ஜனவரியில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் வேறு எங்கு சென்றார்கள்?

‘சைனா டெலிகொமியுனிகேஷன்ஸ் கோர்ப்பேரேஷன்’ ( China Telecommunications Corporation ) என்ற மற்றொரு கையடக்க தொலைபேசி சேவை நிறுவனம் பிப்ரவரியில் 56 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

இந்த 3 கையடக்க தொலைபேசி சேவை நிறுவனங்களும் January , February மாதங்களில் ஒரு கோடியே 47 லட்சத்தி 16 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் திடீரென மாயமானது எப்படி?. அவர்கள் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துவிட்டார்களா? இதுதான் இப்போது சீனாவிடம் முன்வைக்கும் மிக முக்கிய கேள்வி?

ஆனால், இந்த கேள்விகளுக்கு சீனா அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த தெளிவான விளக்கமும் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸூக்கு இன்று வரை 3,300 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா அரசாங்கம் தொடர்ந்து பொய் கூறி வருகிறது.

 

வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

ஆசிரியர்