கொரோனா வைரஸ் ;அமெரிக்காவில் அச்சத்தில் மக்கள்!!!

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நேற்று மட்டும் ஏறத்தாழ 33 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை கொரொனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 2 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடரும் வைரஸ் தொற்று காரணமாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஆயிரத்து 100 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இல்லினாய்ஸ் மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றினால் பலியாகி உள்ளனர். இதேபோல் பென்சில்வேனியாவிலும் ஒரே நாளில் 78 பேர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆசிரியர்