டிரம்ப் குற்றசாட்டை நிராகரித்துள்ள உலக சுகாதார அமைப்பு.

சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது,கொரோனா தொற்று சீனாவில் பரவியபோது, உலக சுகாதார அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமலும், சீனாவுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

2018-2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது நிதியில் 14.67% வவழங்கியதாகக் கூறிய அவர், இனி நிதியுதவி குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பேரழிவுக்கு உலக சுகாதார அமைப்பே காரணம் என்று கூறிய டிரம்ப், அந்த அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாங்கள் சரியான பாதையில் செல்வதாகவும், டிரம்பின் கூற்றில் உண்மை இல்லை என்றும் கூறி அவரின் கருத்தை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது.

ஆசிரியர்