வடகொரிய அதிபர் கிம், நலமுடன் மீண்டு வரவேண்டும்:டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம், நலமுடன் மீண்டு வரவேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் ஜோங் உன் பற்றி வரும் செய்திகள் வருத்தமளிப்பதாகக் கூறினார். கிம்முடன் தனக்கு நல்லதொரு உறவு இருந்ததாகக் கூறிய டிரம்ப், கிம் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிம்மின் உடல்நலம் குறித்து நேரடியான தகவல்கள் ஏதும் வரவில்லை என்று கூறிய டிரம்ப், உளவுத்துறையின் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆசிரியர்